Pages

Friday, November 27, 2015

பதின்பருவக் காதல் குறிப்புகள் (Teen-age Love Scribbles)


அரை நொடியை அணு அளவு

சமமாய் பிரித்து

ஒவ்வொரு கூறுக்கும் ஒவ்வொரு

உணர்ச்சி பாய்ச்சிடும்.

------------------------------------------------

எதுவுமே நடக்காதுன்னு தெரிஞ்சும்

மனசு கற்பனையா அமைச்சுக்கிற

பிம்பம் கொடுக்குறது அலாதி இன்பம்

------------------------------------------------

உனக்காக set

செய்த ringtone

என் cellphone-ல்

இன்னும் ஒலிக்கவில்லை

#ThemeOfபுன்னகைமன்னன்

------------------------------------------------

கண்ணில் தெரியும் கோடுகள்

கனவில் நீ நடந்து சென்ற சுவடுகள்

------------------------------------------------

என் முதல் கனவும்

குழந்தையின் முதல்

பார்வை போலே

கருப்பு வெள்ளை;

நான் கருப்பு;

நீ வெள்ளை;

------------------------------------------------

கடவுள் செயலால்

கடவுச்சொல்லாய் மட்டும்

தங்கி விட்டாய்

------------------------------------------------

தன் தையல் காண வாடும்

தலைவன் வேதனை கண்டு

முந்திச் செல்லும் அந்தி

#ஒருதலை(வன்)க்காதல்

------------------------------------------------

என் பதின்

பருவத்தை

அலங்கரித்தவளே;


என் பாதி

பலம்

எடுத்துக்கொண்டவளே;

என் அரை

நொடியையும்

ஆக்கிரமித்தவளே;


என் கனவிற்கு

உருவம்

கொடுத்தவளே;


என் கவிதைக்கு

உருவகம்

ஆனவளே;


என் கதைக்கு

கரு

கொடுத்தவளே;


என் புனிதத்தை

மீட்டு

தந்தவளே;


என் சினத்தை

சிறையில்

அடைத்தவளே;


காலன் வரும் வரை நீ காதலியே

காலம் கடந்த பின்னும் நீ காதலியே


இறந்து மீண்டும்

பிறப்பேன்

உன் கரம்

பிடிப்பதற்கு !!!                   - கர்ணா   ------------------------------------------------

No comments:

Post a Comment